சனி, 20 ஜூன், 2015

ஓம் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம் கோயி்ல் திருப்பணி


ஓம் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம் கோயி்ல் திருப்பணி

ஆலயம் கட்டி ஞாலம் போற்ற வாழ்க…
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்…
ஆலயம் தோறும் தீபம் ஏற்றி...
இறையருள் பெற்று இன்பமுடன் வாழ்க…

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, வழிகாட்டிகளாக, குருவாக, மக்களோடு மக்களாக வாழ்ந்து, உருவமாகவும், அரூபமாகவும் இருந்து உலக உயிர்களை காத்து வருபவர்கள் சித்தர்கள். அட்டமா சித்திகள் மூலம் மக்களுக்கு எண்ணற்ற நற்பயன்களை வழங்கி, இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களுள் ஒருவரான மாங்காட்டில் ஜீவசமாதியான சர்ப சித்தர், நாடி வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி, கேட்டவரம் தந்து அருளி வருகிறார்.

சர்ப தோஷம், பித்ரு தோஷம், திருமணத்தடை, உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தீர சர்ப சித்தரை வழிபட்டு வர பிரச்சனைகள் அகலும். இது அங்கு வந்து பலனடைந்த பக்தர்கள் கூறும் உண்மை. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த சர்ப சித்தரின் ஜீவ சமாதியான “ஓம் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்” சென்னை மாங்காடு அருகே பட்டூர் கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ளது.



            சர்ப சித்தர் குடி கொண்டுள்ள அதிஷ்டானம் எனப்படும் கோவிலின் மீது மூன்று நிலை கோபுரம், தியான மண்டபம், சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாதி வேலைக்கு மேல் முடிவடைந்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியால் ஆலய திருப்பணிகளைத் தொடருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
          அருளுள்ளம் படைத்த அடியார்கள், சிவ பக்தர்கள், சித்தரடியார்கள் உதவியுடன் இதுவரை இந்தப் பணி சாத்தியமாயிற்று. தொடர்ந்து கட்டுமானப் பணிகளை நிறைவு செய்திட தங்களால் இயன்ற பொருளாகவோ, நிதியாகவோ உதவி செய்து ஆலய திருப்பணியை சிறப்புடன் பூர்த்தி செய்வதற்கு நன்கொடை அளித்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கோவில் திருப்பணியில் பங்கு பெற்று ஐயா சர்ப சித்தர் மற்றும் 18 சித்தர்களின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். 

இப்படிக்கு,
சித்தர் அடிகளார், சிவஸ்ரீ. டாக்டர்  ஜி.டி. ரவிச்சந்திரன்.
ஓம் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், 
நிறுவனத்தலைவர்,
இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகம்.
கோவிந்தராஜ் நகர் மாங்காடு, சென்னை-600 122. 
தொலைபேசி எண்.9789826263 .

பண உதவி செய்வதற்கு அறக்கட்டளை வங்கி கணக்கு எண்:

HINDU TEMPLE WORSHIP AND PEOPLE PROTECTION ORGANISATION
INDIAN BANK A/C NO.6321940662. MANKADU BRANCH,
IFSC CODE: IDIB00M261.

  

 


திங்கள், 4 மே, 2015

மாங்காடு ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பௌர்ணமி திருவிளக்கு பூஜை


மாங்காடு ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில்
சித்ரா பௌர்ணமி திருவிளக்கு பூஜை

      சென்னையை அடுத்த மாங்காடு கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு பௌர்ணமி குருபூஜை 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
       
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்கை சீற்றங்களிலி
ருந்து மக்களைக் காக்கவும், உலக அமைதிக்காகவும், தவமிருந்து ஜீவசமாதியாகி, மக்களைக் காத்து, கேட்கும் வரம் அளித்து வரும் ஐயா சர்ப சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும், சிவபாராயணமும் நடைபெற்றன. மேலும் சந்தனக் காப்பு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
 இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சர்ப சித்தர் ஆதி ஜீவ பீட நிர்வாகியும், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவருமான சித்தர் அடிகளார் ஜி.டி. ரவிச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் போரூர் தர்மலிங்கம், மாநில தலைவர் வேதா, உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 இந்நிகழ்ச்சியில் இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிர்வாகிகள் மாநில துணைத்தலைவர் கே.கோபி, மாநில தலைமை செயலாளர் எஸ்.ஏ. நடராஜ், திருப்பணிக்குழு இமய பல்லவர் பிலால், மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் வி.ஆர். நடராஜன், மாநில செயலாளர் லோகநாதன், கா.மா. தலைமை செயலாளர் பி. பிரகலநாதன், இணை செயலாளர் பாலாஜி, மகளிர் அணி தலைவி மகேஸ்வரி மாதா, பொருளாளர் ஜெயந்தி, பொது செயலாளர் சகிலா, பிரபாவதி, மக்கள் செய்தி ஆசிரியர் சுசிலா மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

சித்தர் அடிகளார் ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்களுக்கு டாக்டர் பட்டம்


சென்னை மாங்காடு கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம் சித்தர் அடிகளாரும், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகத்தின் நிறுவனத் தலைவருமான ஆன்மிக குரு சிவஸ்ரீ. திரு. ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்களுக்கு 13.12.14 அன்று ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் Academy of universal global peace  சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. திரு. ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்களின் ஆன்மிக, சமுதாய சேவை மனித நேய பணிகளைப் பாராட்டும் விதமாக அவருக்கு இந்த டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.





இந்த நிகழ்ச்சியில் இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் போரூர் இ. தர்மலிங்கம், தமிழக ஜனநாயக கட்டுமான தொழிலாளா்கள் நல மத்திய சங்கம் மற்றும் அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் திரு. மா. மணிகண்ட பிரபு, லா எக்ஸ்போஸர் ஆர்டினன்ஸ் சட்ட விழிப்புணர்வு அமைப்பின் நிறுவனத் தலைவர் திரு. சோ.சௌந்தர்ராஜன், தமிழக ஜனநாயக கட்டுமான தொழிலாளா்கள் நல மத்திய சங்க நிர்வாகிகள் கா. செல்வகுமார், எம்.எல். மில்லர், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.









      டாக்டர் பட்டம் பெற்ற சித்தர் அடிகளார் டாக்டர் .ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்கள் மென்மேலும் பல பட்டங்கள் பெற்று வாழ்வில் உயர்நிலை அடைந்து ஆன்மிக உலகிற்கும், சமுதாயத்திற்கும் பல்வேறு தொண்டுகள் செய்து பல்லாண்டு வாழ எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் அருளும், சர்ப சித்தரின் அருளும் ஆசியும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

புதன், 5 நவம்பர், 2014

உலக அமைதி வேண்டி பாத யாத்திரை

உலக அமைதி வேண்டி முருக பக்தர்கள்
திருத்தணிக்கு பாத யாத்திரை

சென்னை மாங்காட்டை அடுத்த கெருகம்பாக்கத்திலிருந்து முருக பக்தர்கள் 50 பேர் உலக அமைதி வேண்டி திருத்தணிக்கு பாதயாத்திரை சென்றனர். மாங்காடு சர்ப சித்தர் ஆதிஜீவ பீடம் மற்றும் இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் கெருகம்பாக்கம் வள்ளி தேவயாணி சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலிலிருந்து கெருகம்பாக்கம், மவுலிவாக்கம், பரணிபுத்தூர், மாங்காடு, பூந்தமல்லி வழியாக திருத்தணிக்கு பாதயாத்திரை குழுவினர் நடந்து சென்றனர். இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகம் நிறுவனத் தலைவர் ஜி.டி. ரவிச்சந்திரன், பாதயாத்திரை குழு தலைவர் ராஜா ஆகியோர் தலைமையில் சென்ற பாதயாத்திரை குழுவினரை வழிநெடுகிலும் முருக பக்தர்கள் வரவேற்றனர்.

pathayathirai itppp t.t.tv - YouTube 



திங்கள், 9 ஜூன், 2014

15-ம் ஆண்டு மகா சித்ரா பவுர்ணமி திருவிழா



சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் 15-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிழா
விளக்கு பூஜை, சித்தர் வழிபாடு
-----------------------------------
      சென்னையை அடுத்த மாங்காடு (பட்டூர் அருகேயுள்ள) கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் 15ம் ஆண்டு மகா சித்ரா பௌர்ணமி திருவிழா மற்றும் சர்ப சித்தர் குரு பூஜை, திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, வண்ண விளக்குகள், மாவிலை தோரணம், வழியெங்கும் வரவேற்பு என விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  இதையொட்டி சர்ப சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன. மேலும் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பெற்றது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  சர்ப சித்தர் துதிப்பாடல், பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிய பேட்டி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை சித்தர் அடிகளார் திருவடி சிவஸ்ரீ G.T. ரவிசந்திரன் மற்றும் சர்ப சித்தர் ஆதி ஜீவ பீட நிர்வாகத்தினர், பக்தர்கள், ஊர் பொது மக்கள், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகத்தினர் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

ஸ்ரீசர்ப சித்தர் 

மக்கள் செய்தி இதழில் வந்த செய்தி

அம்மன்

பக்தர்களுடன் சித்தர் அடிகளார் விளக்கேற்றல்



இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக போஸ்டர் 

விளக்கு பூஜை

சித்தருடன் சிவஸ்ரீ G.T.ரவிச்சந்திரன் அடிகள்

அன்னதானம்

சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் சர்ப சித்தர்
தொடர்புக்கு: மாங்காடு ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், செல் : 9789826263








ஞாயிறு, 11 மே, 2014

ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பவுர்ணமி பூஜை

மாங்காடு ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் 
சித்ரா பவுர்ணமி திருவிளக்கு பூஜை 


                                                     
      சென்னையை அடுத்த மாங்காடு பட்டு அருகே கோவிந்தராஜ் நகரில் சகல தோஷங்களையும் போக்கும் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையும், சிறப்பும் வாய்ந்த இந்த சித்தர் பீடத்தில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் சிறப்பு அபிஷேகமும், விஷேச பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியான சித்ரா பவுர்ணமி தினத்தில் மிகச் சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் ஒவ்வொரு ஆண்டும் இங்கு பூஜைகள் நடைபெறும். அதே போல இந்த ஆண்டும் வருகின்ற சித்ரா பவுர்ணமி ( 14-5-2014 ) தினத்தில் சித்தருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், விஷேச பூஜைகளும், சிவ பாராயணமும் நடைபெற உள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து பசு தானம் வழங்கப்பட உள்ளது. இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று ஸ்ரீசர்ப சித்தரின் அருளாசி பெற அழைக்கிறோம் என ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீட நிர்வாகியும், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவருமான சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: சித்தர் அடிகளார் திரு.ஜி.டி.ரவிச்சந்திரன், சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், கோவிந்தராஜ் நகர், மாங்காடு. கைப்பேசி எண்.9789826263.

சகல தோஷங்களையும் போக்கும் ஸ்ரீசர்ப சித்தர்


 சகல தோஷங்களையும் போக்கும் சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்

ஸ்ரீ சர்ப சித்தர்

       சித்தம் என்றால் அறிவு. சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு. சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவம், யோகம், சோதிடம், மந்திரம், ரசவாதம் போன்ற அரிய அறிவியலையும், மக்கள் நல்வாழ்வுக்கான கருத்துக்களையும், இறைவனை உணரக்கூடிய வழிமுறைகளையும் தந்தவர்கள் சித்தர்கள். அத்தகைய சிறப்பு மிக்க சித்தர்களுள் ஒருவரான சர்ப சித்தர் ஜீவ சமாதியாகி இன்றுவரை மக்களுக்கு அருளி வரும் ஜீவ பீடம் மாங்காடு அருகே பட்டூர் கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ளது.
       முன்பொரு காலத்தில் இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் இந்தப் பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. ஆனால் சர்ப சித்தர் சமாதியாகியிருந்த இந்த இடம் மட்டும் அமைதியாக இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியவர்கள் ஆராய்ந்த போது அங்கே மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் தென்பட்டுள்ளது. இங்கே தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார். அந்த கல் பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் பூதக்கல் என்றும் தெரியவந்துள்ளது.  அந்த லிங்கத்தின் மீது இடது புறத்தில் பிறை வடிவமும், வலது புறத்தில் சூரியன் வடிவமும், லிங்கத்தின் மத்தியில் யோகச் சக்கரமும்,  பிரணவ மந்திரம் பொறிக்கப்பட்டு உள்ளது பஞ்ச புதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது. இங்கே சமாதியாகியுள்ள சர்ப சித்தர்  காலஹஸ்தியில் இருந்து வந்தவர் என்றும், வடக்கு நோக்கி சமாதி அடைந்து உள்ளார்என்றும் கூறப்படுகிறது. இவரது காலம் அறுதியிட்டு கூறமுடியாத அளவுக்கு மிகவும் பழமையானதாகும். சர்ப சித்தர் ஜீவசமாதியாகி, பூதக்கல் உருவாகி 1200 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆதிகாலத்தில் இந்த பூதக்கல்லைப் பார்த்து மக்கள் அச்சமுற்று அப்பகுதி வழியே செல்வதை தவிர்த்துள்ளனர். இதனால் அப்பகுதி புதர் மண்டி காடு போல மாறி, பூதக்கல்லைச் சுற்றி புற்று உருவாகியிருந்துள்ளது. அதன் அருகே செல்பவர்களுக்கு சர்ப்பங்கள்(பாம்புகள்) சீறும் ஓசை கேட்கவே பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்வதைத் தவிர்த்துள்ளனர். காலப்போக்கில் அப்பகுதியில் பூதக்கல் இருப்பதையே மக்கள் மறந்து விட்ட நிலையில் கடந்த 16 ஆண்டுகளுக்குமுன் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி.ரவிச்சந்திரன் அவர்களின் கனவில் வந்த சர்ப சித்தர், அசரரீயாக சில தகவல்களைக் கூறி, தான் ஜீவ சமாதி அடைந்துள்ள இடத்தையும், அடையாளத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சித்தர் அடிகளார் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் இடையே சித்தரின் அருளால் ஜீவசமாதி அமைந்திருக்கும் பகுதியை சுத்தம் செய்து, பூஜைகள் செய்து வழிபட்டு வரலானார். பின்னர் படிப்படியாக சர்ப சித்தருக்கு கோவிலும் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜையும், மகா சிவராத்திரி தினத்தன்று ஆறு கால பூஜையும், பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பரிகார பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இதில் மகாசிவராத்திரி அன்று நிறைவு பூஜையின் போது, பக்தர்களே நேரடியாக தங்களின் திருக்கரங்களால் சர்ப சித்தர் உறைந்திருக்கும் ஜீவ பீடமான பூதக்கல்லிற்கு அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசியைப் பெற்றுச் செல்கின்றனர். இது வேறெங்கும் இல்லாத, யாருக்கும் கிட்டாத கொடுப்பினை என்றால் அது மிகையில்லை.

சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன்
       இயற்கை சீற்றங்களைக் கட்டுப்படுத்தவும், சகல கிரக பீடை விலகவும், கல்வி, குழந்தைப் பேறு, திருமணம் கைகூட, சர்ப (நாக) தோஷம் விலக,  நோய் குணமடைதல், திருஷ்டி, பித்ருக்கள் சாபம், சித்தர்கள், முனிவர்கள் சாபம் நீங்கவும், குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவி பிணக்கு நீங்கி நல்வாழ்வு வாழவும் இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலனளிப்பதாக இங்கு வந்து பயனடைந்த பக்தர்கள் கூறுவதை நாம் கேட்கலாம். பல்வேறு அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், முக்கிய அதிகாரிகள், திரை நட்சத்திரங்கள் இங்கு வந்து வேண்டி, அவர்களின் பிரார்த்தனை பலித்துள்ளதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். நேரில் சென்று தரிசிப்பவர்களுக்கு அது உண்மைதான் என உணரமுடிகிறது. நல்ல ஆன்மிக அதிர்வுகளை உணரலாம்.
சர்ப சித்தர் குடிகொண்டுள்ள பூதக்கல் பல்வேறு சூட்சும ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ந்து இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அந்த ரகசிய சூட்சும அனுபவங்கள் கிடைத்துள்ளன. குரு கடாட்சம் பெற்றவர்களுக்கும், இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் சதா தவ நிலையில் இருக்கும் சர்ப சித்தரின் சகல அனுக்கிரகமும், தெய்வீக அனுபவங்களும் கிடைத்துள்ளன.

 ஸ்ரீசர்ப சித்தர்

யாரிடமும் நன்கொடை, யாசகம் பெறாமல் சித்தரின் அருளாசியுடன் சர்ப சித்தர் ஜீவ பீடத்தை பராமரித்து, பூஜைகளும், நிகழ்ச்சிகளும், விழாக்களும், பவுர்ணமி அன்று அன்னதானமும் வழங்கி, இறைப்பணியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன்.
இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், மன அமைதி பெறவும், பிரச்சனைகள் தீரவும், நல்ல அதிர்வுகள் மூலம் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் சர்ப சித்தர். ஆன்ம பலத்தை  அளிக்கவல்ல அதிர்வலைகள் நிரம்பிய சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தை தரிசனம் செய்து சித்தர்களின் அருளாசியை பெறுங்கள்.

தொடர்புக்கு: சித்தர் அடிகளார் திரு.ஜி.டி.ரவிச்சந்திரன், சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், கோவிந்தராஜ் நகர், மாங்காடு. கைப்பேசி எண்.9789826263.