சனி, 20 ஜூன், 2015

ஓம் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம் கோயி்ல் திருப்பணி


ஓம் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம் கோயி்ல் திருப்பணி

ஆலயம் கட்டி ஞாலம் போற்ற வாழ்க…
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்…
ஆலயம் தோறும் தீபம் ஏற்றி...
இறையருள் பெற்று இன்பமுடன் வாழ்க…

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, வழிகாட்டிகளாக, குருவாக, மக்களோடு மக்களாக வாழ்ந்து, உருவமாகவும், அரூபமாகவும் இருந்து உலக உயிர்களை காத்து வருபவர்கள் சித்தர்கள். அட்டமா சித்திகள் மூலம் மக்களுக்கு எண்ணற்ற நற்பயன்களை வழங்கி, இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களுள் ஒருவரான மாங்காட்டில் ஜீவசமாதியான சர்ப சித்தர், நாடி வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி, கேட்டவரம் தந்து அருளி வருகிறார்.

சர்ப தோஷம், பித்ரு தோஷம், திருமணத்தடை, உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தீர சர்ப சித்தரை வழிபட்டு வர பிரச்சனைகள் அகலும். இது அங்கு வந்து பலனடைந்த பக்தர்கள் கூறும் உண்மை. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த சர்ப சித்தரின் ஜீவ சமாதியான “ஓம் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்” சென்னை மாங்காடு அருகே பட்டூர் கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ளது.



            சர்ப சித்தர் குடி கொண்டுள்ள அதிஷ்டானம் எனப்படும் கோவிலின் மீது மூன்று நிலை கோபுரம், தியான மண்டபம், சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாதி வேலைக்கு மேல் முடிவடைந்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியால் ஆலய திருப்பணிகளைத் தொடருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
          அருளுள்ளம் படைத்த அடியார்கள், சிவ பக்தர்கள், சித்தரடியார்கள் உதவியுடன் இதுவரை இந்தப் பணி சாத்தியமாயிற்று. தொடர்ந்து கட்டுமானப் பணிகளை நிறைவு செய்திட தங்களால் இயன்ற பொருளாகவோ, நிதியாகவோ உதவி செய்து ஆலய திருப்பணியை சிறப்புடன் பூர்த்தி செய்வதற்கு நன்கொடை அளித்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கோவில் திருப்பணியில் பங்கு பெற்று ஐயா சர்ப சித்தர் மற்றும் 18 சித்தர்களின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். 

இப்படிக்கு,
சித்தர் அடிகளார், சிவஸ்ரீ. டாக்டர்  ஜி.டி. ரவிச்சந்திரன்.
ஓம் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், 
நிறுவனத்தலைவர்,
இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகம்.
கோவிந்தராஜ் நகர் மாங்காடு, சென்னை-600 122. 
தொலைபேசி எண்.9789826263 .

பண உதவி செய்வதற்கு அறக்கட்டளை வங்கி கணக்கு எண்:

HINDU TEMPLE WORSHIP AND PEOPLE PROTECTION ORGANISATION
INDIAN BANK A/C NO.6321940662. MANKADU BRANCH,
IFSC CODE: IDIB00M261.

  

 


திங்கள், 4 மே, 2015

மாங்காடு ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பௌர்ணமி திருவிளக்கு பூஜை


மாங்காடு ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில்
சித்ரா பௌர்ணமி திருவிளக்கு பூஜை

      சென்னையை அடுத்த மாங்காடு கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு பௌர்ணமி குருபூஜை 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
       
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்கை சீற்றங்களிலி
ருந்து மக்களைக் காக்கவும், உலக அமைதிக்காகவும், தவமிருந்து ஜீவசமாதியாகி, மக்களைக் காத்து, கேட்கும் வரம் அளித்து வரும் ஐயா சர்ப சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும், சிவபாராயணமும் நடைபெற்றன. மேலும் சந்தனக் காப்பு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
 இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சர்ப சித்தர் ஆதி ஜீவ பீட நிர்வாகியும், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவருமான சித்தர் அடிகளார் ஜி.டி. ரவிச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் போரூர் தர்மலிங்கம், மாநில தலைவர் வேதா, உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 இந்நிகழ்ச்சியில் இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிர்வாகிகள் மாநில துணைத்தலைவர் கே.கோபி, மாநில தலைமை செயலாளர் எஸ்.ஏ. நடராஜ், திருப்பணிக்குழு இமய பல்லவர் பிலால், மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் வி.ஆர். நடராஜன், மாநில செயலாளர் லோகநாதன், கா.மா. தலைமை செயலாளர் பி. பிரகலநாதன், இணை செயலாளர் பாலாஜி, மகளிர் அணி தலைவி மகேஸ்வரி மாதா, பொருளாளர் ஜெயந்தி, பொது செயலாளர் சகிலா, பிரபாவதி, மக்கள் செய்தி ஆசிரியர் சுசிலா மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.